29 ஜூன், 2011

கத்தோலிக்க கிறிஸ்தவம் - அடிப்படை புரிதல்

இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகளின் "திருவழிபாடு" என்ற புத்தகத்தின் முன்னுரையில், "நிறுவனமாக்கப்பட்ட சமயங்கள் வழிபாடுகளை மாற்றி அமைப்பதற்கும், வழிபாடுகளைப் பற்றிய அடிப்படைத் தத்துவங்களை வழங்குவதற்கும் முன்வருகின்றன. இதற்கு கத்தோலிக்கத் திருச்சபையும் விதிவிலக்கல்ல" என்று கோட்பாட்டியல் பேராசிரியர் ம.ஜோ.பிரிட்டோ சே.ச. கூறுகிறார். கத்தோலிக்க திருச்சபை ஒரு நிறுவன மதம் என்பதை கோட்பாட்டியல் பேராசிரியர் ஏ.ம.லூர்துசாமி சே.ச. அவர்களும் "திருச்சபை" என்ற புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையிலே  "முதன்முதலாக திருச்சபை தூய ஆவியின் வழி கிறிஸ்து அளிக்கும் ஓர் அருள் வரமாகத் திகழ்கிறது. அடுத்து அது காணக்கூடிய நிறுவனமாகவும் காட்சியளிக்கின்றது" என்று விவரிக்கிறார்.

கத்தோலிக்க விசுவாசிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதை கத்தோலிக்க ஆட்சியாளர்கள் சிலர் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ யாருக்கும் நோகாவண்ணம் தனது ஆதங்கத்தை வெளிபடுத்திக் கொள்கிறார்கள் என்பதையே மேற்கண்ட வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன.

Hierarchy  of Roman Catholic

மேலே படத்தில் உள்ளபடி மட்டுமல்லாமல் நடைமுறையில் இன்னும் என்னென்ன பதவி அடுக்குகளெல்லாமோ இருக்கிறது. இவை அனைத்திற்கும் அடிநாதமாக இருப்பது பொதுநிலையினராகிய கத்தோலிக்க விசுவாசிகள். இந்த பொதுநிலையினரை ஒருங்கிணைக்கும் இடமாக கோயில்கள் அமைந்துள்ளன. ஏற்கனவே கத்தோலிக்க குடும்பங்கள் நிறைந்த பெரியப் பெரிய பங்குகளெல்லாம் (ஊர்கள்) இருக்கின்றன. அவ்வூர்களைச் சேர்ந்த மக்களும், தான் பிறப்பதற்கு முன் தனது ஊர் தனிப்பங்கு அந்தஸ்தை அடைந்திருந்த ஊர்களைச் சேர்ந்த மக்களும் அறியாத ஓர் இருண்ட  கிறஸ்தவ உலகம் ஒன்று இங்கே இருக்கிறது.

வீட்டில் ஆரம்பித்து காலிமனைகளில் நான்கைந்துபேர் கூடி பின்னர் சிறு குழுவாக இணைந்து குருசடி கட்டி வெறும் செபங்கள் மூலம் நம்பிக்கை வளர்த்து பாதிரியாரைக் கொண்டு மாதம் ஒருமுறை திருப்பலி நடத்தி வளர்ந்து பெருகி தங்களுக்கென்று கோயில் கட்டி வாரம் ஒருமுறை திருப்பலி என்று முன்னேறி  பின்னர் தமது ஊருகென்று பாதிரியார் நியமித்து தனிபங்கு என்ற அந்தஸ்தைப் பெறுவது வரை இந்த பொதுநிலையினரின் ஈடுபாடு அளப்பறியது.

ஆனால் பாவம், இத்தனையும் தனக்கான, தன் குடும்பத்திற்கான குழியை தானே வெட்டும் முயற்சி என்பதை அவர்கள் உண்மையாகவே அறியாதிருக்கிறார்கள். இன்று, "இன்ன ஊரை ஆயர் தனிப்பங்காக உயர்த்தினார்" என்று தினசரிகளில் படிக்கும் போது இனிமேல் அந்த மக்கள் அனுபவிக்க இருக்கும் சுரண்டல்களையும், ஏமாற்றங்களையும் நினைத்து சிறியதாக புன்னகைக்க மட்டுமே முடிகிறது.

லேபிள்கள்: , ,

15 ஜூன், 2011

ஜெயலலிதாவின் பிரச்சார பீரங்கி சீமான்!

104 ஆண்டுகளுக்குப் பிறகு 13-06-2011 அன்று மீண்டும் தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் உணர்வை(!) புரிந்துகொண்ட ஈழத்தாயின் தமிழக அரசு இதன் தொடக்க விழாவை  புறக்கணித்தது. இந்த புறக்கணிப்பை எண்ணி எண்ணி புழங்காகிதமடைந்த சிங்கத்தமிழன் சீமான் தனது நாம் தமிழர் கட்சியின் சார்பாக விரிவான அறிக்கை ஒன்று வெளியிட்டு அதில் தமிழக அரசிற்கு  பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். மேலும், "தமிழர்கள் இருந்தால் என்ன, செத்தால் என்ன?" என்று நினைக்கும் இந்திய அரசு இலங்கை அரசுடன் எல்லா வகையிலும் நட்புறவு கொள்ளத் துடிக்கிறது என்றும், தமிழினத்தை கொன்றுக் குவித்த இனவெறி அரசுடன் கூடிக் குலாவுகிறது என்றும் மத்திய அரசை ஒரு வாங்கு வாங்கிவிட்டார் வீரத் தமிழன் சீமான்.  

தூத்துக்குடி - கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்து நடந்தால் தமிழ் மக்களின் உணர்வுகள் பாதிக்கப்படும் என்று பிரதம அமைச்சரிடம் கடிதம் கொடுத்த ஜெயலலிதா தினமும் சென்னை - கொழும்பு  இடையே 5 பயணிகள் விமானப்  போக்குவரத்து சேவை நடைபெற்றுக் கொண்டிருப்பதை மறந்துவிட்டார் போல. கப்பல் போக்குவரத்தால் மட்டும் தான் தமிழர்கள் உணர்வு பாதிக்கப்படும், ஆனால் விமானச் சேவையால் தமிழர் மனம் வியந்தோதும் என்று தமிழர்களின் கைநாடியை சரியாகவே கணித்து வைத்திருக்கிறார்! ஈழ தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்ட போது கொட நாட்டில்  ஓய்வுக்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர் இப்போது தான் நிறைவேற்றிய சட்டமன்ற தீர்மானம் கேலி கூத்தாக்கப்பட்டுவிட்டதால் மனம் கொள்ளாமல் தமிழர்கள் உணர்வு பாதிக்கபடுவதாக பிதற்றுவது மக்களை எந்த அளவிற்கு முட்டாள்களாக பார்க்கிறார் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.

தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பல் தொடக்க விழாவை தமிழக அரசு புறக்கணித்ததை நன்றியுடன் வரவேற்ற சிங்கத் தமிழன் சீமான், விமானச் சேவையை  நிறுத்த தமிழக அரசு கோரிக்கை அளிக்க வேண்டும் என்று கேட்டு மேற்கண்ட அறிக்கையிலே ஒரு இடம் ஒதுக்காதது ஏன்? ஜெயலலிதாவின் தமிழக அரசு இலங்கை-க்கு பொருளாதாரதடை விதிக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த வெற்றியாக சித்தரிக்கும் சீமான், மத்திய அரசுடன் எல்லா வகையிலும் சேர்ந்து இணக்கமாகிவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கும் மம்மியின் தமிழக அரசை பாராட்டுவார்!, புகழ்வார்! ஏன் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்துக் கிடந்து நன்றியும் சொல்லுவார். என்னே! ஒரு வீரத் தமிழன். 

எல்லா வகையிலும் கருணாநிதியை திட்ட வேண்டும், பழி போட வேண்டும், எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ஜெயலலிதாவிற்க்கும் மத்திய அரசைப் போல, "ஈழத் தமிழனும், தமிழக மீனவத் தமிழனும் செத்தால் என்ன, இருந்தால் என்ன?" என்ற மனப்பாங்கு தான் என்பது இந்த அசிங்கத் தமிழனுக்கு மட்டும் புரியாதோ?

படம்: google.com

லேபிள்கள்: ,

14 ஜூன், 2011

குருப்பட்டம் எவ்வாறு வழங்கப்படும்?

குருத்துவம் (Holy Orders):
கோயில்களில் பூசை (திருப்பலி) செய்யும் தகுதியை கொடுப்பது குருத்துவம் ஆகும். திருமுழுக்கு பெற்ற எந்த ஆணும் குருத்துவம் பெற தகுதி உடையவராவர். பத்து அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து அதில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். முதலில் மறைமாவட்ட இறையியல் பள்ளியில் ஒரு வருடமும் அதன் பின்னர் மூன்று வருட பட்டப்படிப்பும் முடிக்க வேண்டும். தொடர்ந்து தத்துவயியல், இறையியல், நிர்வாகம் என்று கிட்டத்தட்ட பதினோரு வருடங்கள் படித்து தேர்ச்சி பெற வேண்டும். இறுதியாக,

எவ்வாறு வழங்கப்படும்?:
ஆயர் (பிஷப்) தலைமையில் வழக்கமான திருப்பலி நடைபெறும். திருப்பலியின் மத்தியில் சடங்குகள் ஆரம்பமாகும்.

- முதலில் ஒருவர், குருப்பட்டம் பெற இருப்பவர்களை முன் அழைப்பார். குருபட்டம் பெறுபவர் "இதோ வருகிறேன்" என்றுச் சொல்லி முன் செல்வார்.

- நம் சகோதர்களுக்கு குருப்பட்டம் அளிக்க திருச்சபை உங்களை கேட்கிறது என்று பாதிரியார் சொல்லுவார்.

- தகுதி உடையவரா என ஆயர் கேட்பார். அதற்கு, கிறிஸ்தவ மக்களை கேட்டதிலிருந்து தகுதி உடையவர் என சான்றுரைப்பதாக பாதிரியார் பதிலளிப்பார்.

- பின்னர் ஆயர் சில விருப்பக் கேள்விகளை கேட்பார். குருப்பட்டம் பெறுபவர் எல்லா கேள்விகளுக்கும் தாம் விரும்புவதாக பதிலளிப்பார்கள்.

- பின்னர் ஆயருக்கு பணிந்து நடக்க வாக்களிப்பார்கள்.

- சில செபங்கள் செய்த பின்னர், குருப்பட்டம் பெறுபவர் தலையில் ஆயர் இரண்டு கைகளையும் வைப்பார், அருகில் நிற்கும் பாதிரியார்களும் கைகளை வைப்பார்கள், செபிப்பார்கள்.

குருத்துவம் (Holy Orders)

 - குருப்பட்டம் பெறுபவர் திருப்பலியின் போது அணியும் பாதிரியாருக்கான பிரத்தியேக ஆடை அணிவார்கள்.

- ஆயர் சில செபங்கள் செய்த பின்னர், குருப்பட்டம் பெறுபவர் கையில் ரசக் கிண்ணத்தையும், அப்பத் தட்டையும் அளிப்பார்.

இவ்வாறு ஒருவரை பாதிரியாராக ஆயர் திருநிலைப்படுத்துகிறார்.

இதுவரையிலும் கிறிஸ்தவம் கட்டமைத்துள்ள ஏழு அருள்சாதனங்கள் பற்றியும், ஏற்கனவே சொன்னது போல திருமணம் செய்பவர் பொதுநிலையினராகவும் அதாவது கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாசியாகவும், குருத்துவம் ஏற்பவர் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆட்சியாளராகவும் இருக்கிறார்கள் என்றும் பார்த்தோம். இனி பொதுநிலையினர் என்ற அடிமட்ட கிறிஸ்தவ விசுவாசிகள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகிறார்கள், அதன் நிர்வாக அமைப்புகள் என்ன என்பதை பற்றி அடுத்த பதிவுகளில் காணலாம்.

படம்: google.com

லேபிள்கள்: , ,

13 ஜூன், 2011

...திருமாங்கலியத்தை அணிந்துக்கொள்.

நோயில் பூசுதல் (Anointing of the Sick):
மரணப் படுக்கையில் இருக்கும் ஒருவருக்கு அவரின் ஆத்துமம் மற்றும் உடல் நலனை காப்பதற்க்கோ அல்லது கஷ்டபடாமல் போய் சேருவதற்க்கோ பாதிரியாரால் நற்கருணை என்னும் நன்மை கொடுக்கும் சடங்கு நோயில் பூசுதல் ஆகும்.

கடைசியாக, திருமணம் அல்லது குருத்துவம் என்ற இரண்டு அருட்சாதனங்கள் உள்ளன. ஒருவர் இவற்றில் ஏதாவது ஒன்றைப் பெறலாம். திருமணமான பின் குருத்துவம் ஏற்று இரண்டையும் கூட பெற முடியும்.

திருமணம் (Matrimony):
ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கு கோயிலில்  வைத்து பெற்றோர், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் முன்னிலையில் பாதிரியாரால் செய்விக்கப்படும் ஒப்பந்தம் திருமணமாகும். கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் மற்ற அருட்சாதனங்களுக்கு பாட புத்தகங்கள், பயிற்சி வகுப்புகள் இருப்பது போல கட்டாயமாக்கப்பட்டுள்ள திருமண பயிற்சி வகுப்பும் உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில்  கலந்துகொண்ட பின்னர் கோயிலில் மூன்று ஞாயிறு திருப்பலிகளில்  திருமண அறிக்கை (பிறை) வாசிக்கப்படும். 

திருமண ஒப்பந்தம்:
திருமண நாள் அன்று கோயிலில் திருப்பலி ஏற்பாடு செய்து வழக்கமான திருப்பலி நடைபெறும். திருப்பலியின் மத்தியில் மக்கள் எல்லோரும் அமர்ந்திருக்க பாதிரியார் மணமக்களை சில கேள்விகள் கேட்பார்.

பாதிரியார் (இருவரிடமும்): எவ்வித வற்புறுத்தலுமின்றி முழு சம்மதத்துடன் வந்திருக்கிறீர்களா?

மணமக்கள்: வந்திருக்கிறோம். (திருமண விருப்பமில்லை என்றால்  இந்நேரத்தில் தெரிவிக்கலாம்)

பாதிரியார் (இருவரிடமும்): மணவாழ்க்கை நெறியைப் பின்பற்றி, வாழ்நாளெல்லாம் ஒருவரைவொருவர் நேசிக்கவும், மதிக்கவும் தயாராய் இருக்கிறீர்களா?

மணமக்கள்: தயாராய் இருக்கிறோம்.

பாதிரியார் (இருவரிடமும்): இறைவன் உங்களுக்கு அருளும் மக்களை அன்புடன் ஏற்று, கிறிஸ்துவின் போதனைக்கும் திருச்சபையின் சட்டத்திற்கும் ஏற்றபடி வளர்ப்பீர்களா?

மணமக்கள்: வளர்ப்போம்.

பாதிரியார்: திருமண ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவதால் உங்கள் வலதுகைகளை சேர்த்து பிடியுங்கள், இறைவன் திருமுன்  திருச்சபையின் முன்னிலையில் உங்கள் சம்மதத்தைத் தெரிவியுங்கள்.

(கைகளை சேர்த்து பிடிப்பார்கள்.)

மணமகன்: (பெயர்) என்னும் நான், (பெயர்) என்னும் உன்னை என் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாய் இருந்து, என் வாழ்நாளெல்லாம் உன்னை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறேன்.

மணமகள்: (பெயர்) என்னும் நான், (பெயர்) என்னும் உங்களை  என் கணவராக ஏற்றுக்கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் நான் உமக்கு பிரமாணிக்கமாய் இருந்து, என் வாழ்நாளெல்லாம் உம்மை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறேன்.

பாதிரியார்: திருச்சபையின் முன்னிலையில் நீங்கள் தெரிவித்த இந்த சம்மதத்தை ஆண்டவர் கனிவுடன் உறுதிபடுத்தி, தம் ஆசியை உங்களுக்கு வழங்குவார். இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.

மணமகன்: (மணமகளின் பெயரைச் சொல்லி) என் அன்புக்கும் பிரமாணிக்கத்துக்கும் அடையாளமாக இந்த திருமாங்கலியத்தை தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் அணிந்துக்கொள், இவ்வாறு  சொல்லி தாலி கட்டுவார்.

லேபிள்கள்: , ,

5 ஜூன், 2011

முரண்பாடு - அப்பா

கால்கள் தடுமாற
அழைத்து வரப்படுகிறேன்

துயரத்தின் உச்சத்தில்
உன்னை நெஞ்சோடு அணைக்க
எத்தனிக்கிறது மனம்

கைகளால் தொடுவதற்கு விடாமல்
இழுத்துக் கொள்ளப்படுகிறேன்

உதட்டோடு ஒட்டி வழியும் 
கண்ணீரோடு முத்தமிடுகிறேன்
உன் நெற்றியில்.

பள்ளியில் விட்டுச் செல்லும்
அப்பாவுக்கு 
அழுகையினோடு முத்தமிடும்
சிறுவனைப் பார்க்கையில்....

வந்து செல்கிறது
உன் கல்லறைப் பயண
நினைவுகள்...

லேபிள்கள்:

2 ஜூன், 2011

சிறுதாவூர் சீமாட்டியும் இலவச அரிசியும்!

கடந்த திமுக-வின் ஆட்சியில், ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி திட்டம்  அமல்படுத்தப்பட்டது. அது பற்றி பல்வேறு கருத்துக்கள் படித்தவர்கள் மத்தியில் மின்னஞ்சல்களாகவும், கட்டுரைகளாகவும் இணைய தளத்தில் பறந்து திரிந்தன. அவற்றில்,

இலவசங்களைக் கொடுத்து தமிழக மக்களை உழைக்காதவர்களாக, சோம்பேறிகளாக மாற்றுகிறார் கருணாநிதி என்று உணர்ச்சி வசப்பட்டார்கள். மேலும்,

ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி வாங்கி சாப்பிட்டு கட்டண கழிப்பிடத்தில் கக்கா போக இரண்டு ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கிறது என்று நகைச்சுவை உணர்வோடு கேலி செய்தார்கள். இப்போது,

ஜூன் 1 முதல் இலவச அரிசி திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது. அன்று சமூக அக்கறையோடு மின்னஞ்சல்களை அனுப்பியவர்களும், கட்டுரை எழுதியவர்களும் இன்று எவ்வித உணர்சிவசப்பாடும், நகைச்சுவை உணர்வும் இல்லாமல் மேல் கீழ் வாய்களை காட்டன் வைத்து அடைத்து விட்டு அமைதியாக இருப்பதும் கூட சமூக அக்கறை தான் போலும்!

அடுத்து, 

கழக கண்மணிகளின் ஆசைக்கிணங்க ஊழல் நாயகி சிறுதாவூர் சீமாட்டி இப்போது நகைகளை அணிய ஆரம்பித்திருக்கிறாராம்! 

மகன் திருமணத்தில் ஜெயலலிதா 

தான் ஒரு ஊழல்வாதி என்பதை தமிழக மக்கள் மறந்து விட்டாலும் தன்னால் அவற்றை மறக்க முடியாத கொடநாடு அம்மா, ஊழல் வழக்கில் கைதாகி சிறை சென்றதிலிருந்து இத்தனை நாட்களும் குற்ற உணர்ச்சியினால் நகைகளை ஒதுக்கி வைத்திருந்தார். 

தன்னை  ஊழல்வாதி என்று ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டிய கருணாநிதியின் குடும்பமே இப்போது ஊழல் புகாரில் சிக்கி ஊழல் குடும்பம் என்று பெயர் வாங்கிவிட்டதால், "சரி சரி உனக்கும் எனக்கும் சமமா போச்சி" என்ற சமத்துவ நோக்கில்,  "இனிமே நான் பழைய மாதிரி தான்" என்று நிரூபிக்க நகைகளை அணிந்திருப்பது... ஹி ஹி.... சிரிக்க வைக்கிறது!

இனியும், காலணிகள் நிறைந்த அறையைக் காணும் பேறு தமிழக மக்களுக்கு கிடைக்குமா! அம்மா அருள் புரிவாரா?

படம்: google.com

லேபிள்கள்: ,