13 ஜூன், 2011

...திருமாங்கலியத்தை அணிந்துக்கொள்.

நோயில் பூசுதல் (Anointing of the Sick):
மரணப் படுக்கையில் இருக்கும் ஒருவருக்கு அவரின் ஆத்துமம் மற்றும் உடல் நலனை காப்பதற்க்கோ அல்லது கஷ்டபடாமல் போய் சேருவதற்க்கோ பாதிரியாரால் நற்கருணை என்னும் நன்மை கொடுக்கும் சடங்கு நோயில் பூசுதல் ஆகும்.

கடைசியாக, திருமணம் அல்லது குருத்துவம் என்ற இரண்டு அருட்சாதனங்கள் உள்ளன. ஒருவர் இவற்றில் ஏதாவது ஒன்றைப் பெறலாம். திருமணமான பின் குருத்துவம் ஏற்று இரண்டையும் கூட பெற முடியும்.

திருமணம் (Matrimony):
ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கு கோயிலில்  வைத்து பெற்றோர், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் முன்னிலையில் பாதிரியாரால் செய்விக்கப்படும் ஒப்பந்தம் திருமணமாகும். கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் மற்ற அருட்சாதனங்களுக்கு பாட புத்தகங்கள், பயிற்சி வகுப்புகள் இருப்பது போல கட்டாயமாக்கப்பட்டுள்ள திருமண பயிற்சி வகுப்பும் உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில்  கலந்துகொண்ட பின்னர் கோயிலில் மூன்று ஞாயிறு திருப்பலிகளில்  திருமண அறிக்கை (பிறை) வாசிக்கப்படும். 

திருமண ஒப்பந்தம்:
திருமண நாள் அன்று கோயிலில் திருப்பலி ஏற்பாடு செய்து வழக்கமான திருப்பலி நடைபெறும். திருப்பலியின் மத்தியில் மக்கள் எல்லோரும் அமர்ந்திருக்க பாதிரியார் மணமக்களை சில கேள்விகள் கேட்பார்.

பாதிரியார் (இருவரிடமும்): எவ்வித வற்புறுத்தலுமின்றி முழு சம்மதத்துடன் வந்திருக்கிறீர்களா?

மணமக்கள்: வந்திருக்கிறோம். (திருமண விருப்பமில்லை என்றால்  இந்நேரத்தில் தெரிவிக்கலாம்)

பாதிரியார் (இருவரிடமும்): மணவாழ்க்கை நெறியைப் பின்பற்றி, வாழ்நாளெல்லாம் ஒருவரைவொருவர் நேசிக்கவும், மதிக்கவும் தயாராய் இருக்கிறீர்களா?

மணமக்கள்: தயாராய் இருக்கிறோம்.

பாதிரியார் (இருவரிடமும்): இறைவன் உங்களுக்கு அருளும் மக்களை அன்புடன் ஏற்று, கிறிஸ்துவின் போதனைக்கும் திருச்சபையின் சட்டத்திற்கும் ஏற்றபடி வளர்ப்பீர்களா?

மணமக்கள்: வளர்ப்போம்.

பாதிரியார்: திருமண ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவதால் உங்கள் வலதுகைகளை சேர்த்து பிடியுங்கள், இறைவன் திருமுன்  திருச்சபையின் முன்னிலையில் உங்கள் சம்மதத்தைத் தெரிவியுங்கள்.

(கைகளை சேர்த்து பிடிப்பார்கள்.)

மணமகன்: (பெயர்) என்னும் நான், (பெயர்) என்னும் உன்னை என் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாய் இருந்து, என் வாழ்நாளெல்லாம் உன்னை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறேன்.

மணமகள்: (பெயர்) என்னும் நான், (பெயர்) என்னும் உங்களை  என் கணவராக ஏற்றுக்கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் நான் உமக்கு பிரமாணிக்கமாய் இருந்து, என் வாழ்நாளெல்லாம் உம்மை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறேன்.

பாதிரியார்: திருச்சபையின் முன்னிலையில் நீங்கள் தெரிவித்த இந்த சம்மதத்தை ஆண்டவர் கனிவுடன் உறுதிபடுத்தி, தம் ஆசியை உங்களுக்கு வழங்குவார். இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.

மணமகன்: (மணமகளின் பெயரைச் சொல்லி) என் அன்புக்கும் பிரமாணிக்கத்துக்கும் அடையாளமாக இந்த திருமாங்கலியத்தை தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் அணிந்துக்கொள், இவ்வாறு  சொல்லி தாலி கட்டுவார்.

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு