17 மே, 2011

மீண்டும் வருவார்?

அன்பு செய் என்றதற்காய்

கள்வனைப் போல் கைது செய்து
முகத்தில் அறைந்து எச்சில் உமிழ்ந்து
தலையில் முள்முடி யடித்து
என்னாடை களைந்து நிர்வாணமாக்கி
அவமானச் சிலுவையில் தொங்கவிட்டு 
என்னுதிரஞ்சொட்ட உயிரை பறித்தாயே மனிதா!

மீண்டு(ம்) வா வென்று கெஞ்சித்து அழைக்கிறாய் - 
ஈராயிரமாண்டுகளாய்,
எத்தனை வன்மமுன் நெஞ்சில்!
இனி என்னால் ஒருபோதும் வரமுடியாது.
மன்னித்துவிடு.

லேபிள்கள்: ,

2 கருத்துகள்:

18 மே, 2011 அன்று 12:20 AM க்கு, Blogger saarvaakan கூறியது…

யூதர்களாவது அவரை ஒருமுறைதான் சிலுவையில் அறைந்தனர்.இந்த கிறித்தவ மத்வாதிகள் ஒவ்வொரு கணமும் அறைகிறார்கள்.

 
30 மே, 2011 அன்று 9:03 AM க்கு, Anonymous dravidan கூறியது…

click and read


===>
ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 5 : 39)

** ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...???

ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.

புதிய ஏற்பாடு பைபிள்: யோவான்:18 : 22 – 23. ல் " இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்."

ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்..
<===

...

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு