27 ஏப்., 2011

அறிமுகம்

டந்த இரு வருடங்கள் முதலாக தமிழ் வலைப்பதிவுகளை ஓரளவிற்கு தொடர்ச்சியாகப் படித்துக்கொண்டிருக்கையில் தீவிர கத்தோலிக்க கிறிஸ்தவ பக்தி பழமாக இருந்ததாலோ என்னவோ இயல்பாகவே அனைத்து மதம் சார்ந்த பதிவுகள், கட்டுரைகள், செய்திகள், வரலாறுகள் அடங்கிய எழுத்துகளைப் படிப்பதிலேயே அதிக விருப்பம் எனக்கு. அதன் விளைவு நான் இன்று இறைமறுப்பாளன்!.

வலைபதிவுகளில் பெண்ணுரிமை பற்றிய விவாதங்களில், கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் ஒரு பெண்ணால் போப் ஆக முடியுமா? என்ற கேள்வி, பாதிரியார் அளவுக்குக் கூட அங்கு ஒரு பெண்ணுக்கு உரிமையில்லை மதிப்பில்லை என்பதை எல்லா கத்தோலிக்க கிறிஸ்தவனு/ளும் அறிந்தவர்களாக இருப்பதனால் அக்கேள்வி அவர்கள் சிந்தனையை தூண்டுவதாக எப்போதும் இருப்பதில்லை இருக்கப்போவதில்லை. சாதியை உள்வாங்கிய மதம் என்றும், பிற மதங்களை இகழ்ந்து பேசி மதம் மாற்ற முயற்சி செய்கிறார்கள் என்றும் பரவலாக குற்றச்சாட்டு இருக்கிறது. மேலும் பாதிரியார்களின் பாலியல் மற்றும் பண மோசடி செய்திகளையும் அவ்வப்போது அறிந்து கொண்டிருக்கிறோம். 

ஆனால் பொதுவெளிக்கு வராத எந்தனையோ பிரச்சனைகள் கிறிஸ்தவத்திலும் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு கடைநிலை கிறிஸ்தவ நம்பிக்கையாளன் எந்த அளவிற்கு அடிமைப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறான், சுரண்டப்படுகிறான் என்பதை பொதுவெளிக்கு கொண்டுவர வேண்டும், அம்மதத்தை பற்றிய மறைவாய் இருக்கும் அடிப்படை புரிதல்கள் மற்றும் நடைமுறை செயல்பாடுகளை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த மதம் ஒழித்திடு! மனிதம் வளர்த்திடு வலைப்பூ.

பாசிஸ்ட்

3 கருத்துகள்:

30 ஏப்ரல், 2011 அன்று 1:48 PM க்கு, Blogger hiuhiuw கூறியது…

வாழ்த்துகள். பின்தொடர்பவர்களுக்கான இணைப்பை உருவாக்கவும்!

 
20 மே, 2011 அன்று 7:55 AM க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

நல்ல எண்ணம் தான். ஆனால் தாங்கள் உண்மையில் ஒரு கிருத்தவர் தானா என்பதே சந்தேகமாக இருக்கின்றது. முதலில் உங்களின் பின்புலத்தை இன்னும் கொஞ்சம் விளக்கினால் நல்லாருக்கும். ஏனெனில் ஏற்கனவே பதிவுலகில் போலிப் பெயர்களில் பல ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்னென்னவோ எழுதி வருகின்றார்கள். நாகர் கோயில் என்றதும் அநீக் கூட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகின்றது சகோ.

கூலிக்கு மாறடிப்போரை பதிவுலகில் மதிப்பதில்லை என்ற எழுதா விதியால் இதனைச் சொல்லுகின்றேன். கத்தோலிக்க மததின் கொடுமைகளை எடுத்தியம்ப வேண்டுமாயின் - தங்களின் குறைந்தப் பட்ச பின்புலங்களை வெளியிடுவது நல்லது.

 
21 மே, 2011 அன்று 10:41 AM க்கு, Blogger பாசிஸ்ட் கூறியது…

நீங்கள் சொல்லுவது போல பதிவுலகில் இருக்கும் போலிகளைப் பற்றி நானும் அறிந்திருக்கிறேன். வரும் பதிவுகளை தொடர்ந்து படித்தால் நான் உண்மையாகவே கத்தோலிக்க கிறிஸ்தவனா என்ற உங்கள் சந்தேகம் மாற வாய்ப்பிருப்பதாக நினைக்கிறன்.நன்றி.

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு