29 ஜூன், 2011

கத்தோலிக்க கிறிஸ்தவம் - அடிப்படை புரிதல்

இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகளின் "திருவழிபாடு" என்ற புத்தகத்தின் முன்னுரையில், "நிறுவனமாக்கப்பட்ட சமயங்கள் வழிபாடுகளை மாற்றி அமைப்பதற்கும், வழிபாடுகளைப் பற்றிய அடிப்படைத் தத்துவங்களை வழங்குவதற்கும் முன்வருகின்றன. இதற்கு கத்தோலிக்கத் திருச்சபையும் விதிவிலக்கல்ல" என்று கோட்பாட்டியல் பேராசிரியர் ம.ஜோ.பிரிட்டோ சே.ச. கூறுகிறார். கத்தோலிக்க திருச்சபை ஒரு நிறுவன மதம் என்பதை கோட்பாட்டியல் பேராசிரியர் ஏ.ம.லூர்துசாமி சே.ச. அவர்களும் "திருச்சபை" என்ற புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையிலே  "முதன்முதலாக திருச்சபை தூய ஆவியின் வழி கிறிஸ்து அளிக்கும் ஓர் அருள் வரமாகத் திகழ்கிறது. அடுத்து அது காணக்கூடிய நிறுவனமாகவும் காட்சியளிக்கின்றது" என்று விவரிக்கிறார்.

கத்தோலிக்க விசுவாசிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதை கத்தோலிக்க ஆட்சியாளர்கள் சிலர் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ யாருக்கும் நோகாவண்ணம் தனது ஆதங்கத்தை வெளிபடுத்திக் கொள்கிறார்கள் என்பதையே மேற்கண்ட வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன.

Hierarchy  of Roman Catholic

மேலே படத்தில் உள்ளபடி மட்டுமல்லாமல் நடைமுறையில் இன்னும் என்னென்ன பதவி அடுக்குகளெல்லாமோ இருக்கிறது. இவை அனைத்திற்கும் அடிநாதமாக இருப்பது பொதுநிலையினராகிய கத்தோலிக்க விசுவாசிகள். இந்த பொதுநிலையினரை ஒருங்கிணைக்கும் இடமாக கோயில்கள் அமைந்துள்ளன. ஏற்கனவே கத்தோலிக்க குடும்பங்கள் நிறைந்த பெரியப் பெரிய பங்குகளெல்லாம் (ஊர்கள்) இருக்கின்றன. அவ்வூர்களைச் சேர்ந்த மக்களும், தான் பிறப்பதற்கு முன் தனது ஊர் தனிப்பங்கு அந்தஸ்தை அடைந்திருந்த ஊர்களைச் சேர்ந்த மக்களும் அறியாத ஓர் இருண்ட  கிறஸ்தவ உலகம் ஒன்று இங்கே இருக்கிறது.

வீட்டில் ஆரம்பித்து காலிமனைகளில் நான்கைந்துபேர் கூடி பின்னர் சிறு குழுவாக இணைந்து குருசடி கட்டி வெறும் செபங்கள் மூலம் நம்பிக்கை வளர்த்து பாதிரியாரைக் கொண்டு மாதம் ஒருமுறை திருப்பலி நடத்தி வளர்ந்து பெருகி தங்களுக்கென்று கோயில் கட்டி வாரம் ஒருமுறை திருப்பலி என்று முன்னேறி  பின்னர் தமது ஊருகென்று பாதிரியார் நியமித்து தனிபங்கு என்ற அந்தஸ்தைப் பெறுவது வரை இந்த பொதுநிலையினரின் ஈடுபாடு அளப்பறியது.

ஆனால் பாவம், இத்தனையும் தனக்கான, தன் குடும்பத்திற்கான குழியை தானே வெட்டும் முயற்சி என்பதை அவர்கள் உண்மையாகவே அறியாதிருக்கிறார்கள். இன்று, "இன்ன ஊரை ஆயர் தனிப்பங்காக உயர்த்தினார்" என்று தினசரிகளில் படிக்கும் போது இனிமேல் அந்த மக்கள் அனுபவிக்க இருக்கும் சுரண்டல்களையும், ஏமாற்றங்களையும் நினைத்து சிறியதாக புன்னகைக்க மட்டுமே முடிகிறது.

லேபிள்கள்: , ,

3 கருத்துகள்:

8 ஆகஸ்ட், 2011 அன்று PM 3:50 க்கு, Blogger மாலதி கூறியது…

இது போன்ற சிறப்பான ஆக்கங்களை வெளியிட்டு மக்களிடம் நல்ல கருத்துகளை பதியமிட செய்ய வேண்டி இருக்கிறது பாராட்டுகள் தொடர்க .............

 
7 ஏப்ரல், 2013 அன்று PM 5:40 க்கு, Anonymous சைமன் கூறியது…

தேவையில்லாத வெளியீடு
மதம் ஒழித்திடு என்று ஒரு மதம் உண்டாக்க முயற்சியா ?

 
12 ஏப்ரல், 2013 அன்று PM 3:44 க்கு, Blogger பாசிஸ்ட் கூறியது…

@ சைமன், மதம் உண்டாக்கப்பட்டது என்பதை உணர்ந்தமைக்கு வாழ்த்துகள்!

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு